தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலையில் காலியாக உள்ள 109 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.02.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://hrce.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 109 |
நேர்காணல் தேதி | 28.02.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
I. வெளித்துறை காலியிடங்கள் | |
1. தட்டச்சர் | 01 |
2. காவலர் | 70 |
3. கூர்க்கா | 02 |
4. ஏவலாள் (பண்ணை சாகுபடி) | 02 |
5. உபகோயில் பெருக்குபவர் | 02 |
6. கால்நடை பராமரிப்பாளர் | 01 |
7. உபகோயில் காவலர் | 02 |
II. உள்துறை காலியிடங்கள் | |
8. திருமஞ்சனம் | 03 |
9. முறை ஸ்தானீகம் | 10 |
10. ஒடல் | 02 |
11. தாளம் | 03 |
III. தொழில்நுட்ப காலியிடங்கள் | |
12. தொழில்நுட்ப உதவியாளர் (மின்னனு & தொலைத் தொடர்பு) | 01 |
13. பிளம்பர் | 04 |
14. உதவி மின்பணியாளர் | 02 |
IV. அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி காலியிடங்கள் | |
15. தலைமை ஆசிரியர் | 01 |
16. தேவார ஆசிரியர் | 01 |
17. சங்கீத இசை ஆசிரியர் | 01 |
18. ஆகம ஆசிரியர் | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. தட்டச்சர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் அரசு தொழில் நுட்பத் தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்,
- (I) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
- (II)தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது)
- (III)ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை.
- ஆனால், இனம் (I) இல் குறிப்பிட்டுள்ள தகுதியை விண்ணப்பதாரர் பெறாத தேர்வில், இனம் (II) இல் அல்லது இனம் (III) இல் உள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் மேற்சொன்ன முன்னுரிமை வரிசையில் நியமிக்கப்படலாம்.
கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. காவலர்: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
3. கூர்க்கா: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
4. ஏவலாள் (பண்ணை சாகுபடி): தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
5. உபகோயில் பெருக்குபவர்: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
6. கால்நடை பராமரிப்பாளர்: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
7. உபகோயில் காவலர்: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
8. திருமஞ்சனம்: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
9. முறை ஸ்தானீகம்: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
10. ஒடல்: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
11. தாளம்: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மற்றும்
12. தொழில்நுட்ப உதவியாளர் (மின்னனு & தொலைத் தொடர்பு): மின்னனு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
13. பிளம்பர்: அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் (I.T.I) குழாய் தொழில் / குழாய் பணியர் (Plumber Trade) பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும்.
தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் (Apprenticeship) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
14. உதவி மின்பணியாளர்: அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் (I.T.I) வழங்கப்பட்ட மின் (Electrical) / மின் கம்பி பணியாளர் பாடப்பிரிவில் (Wireman Trade) தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும்.
மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து "H" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
15. தலைமை ஆசிரியர்: தமிழில் முதுகலைப் பட்டமும், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒரு இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு மேனிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். தத்துவம், சமயம் மற்றும் பண்பாடு போன்றவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
16. தேவார ஆசிரியர்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும்
யாதொரு ஆகம பள்ளி (அல்லது) தேவார பாடசாலைகள் (அல்லது) வேத பாடசாலைகளில் மூன்றாண்டுகள் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
17. சங்கீத ஆசிரியர்: குரலிசையில் மூன்று வருட பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். (அல்லது)
இசை ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..
18. ஆகம ஆசிரியர்: ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் (சைவம்) ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் ஐந்தாண்டு கால அளவிற்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
சைவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம பாடசாலையில் நான்கு ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
I. வெளித்துறை காலியிடங்கள் | |
1. தட்டச்சர் | ₹.18500 - 58600/- |
2. காவலர் | ₹.15900 - 50400/- |
3. கூர்க்கா | ₹.15900 - 50400/- |
4. ஏவலாள் (பண்ணை சாகுபடி) | ₹.10000 - 31500/- |
5. உபகோயில் பெருக்குபவர் | ₹.10000 - 31500/- |
6. கால்நடை பராமரிப்பாளர் | ₹.10000 - 31500/- |
7. உபகோயில் காவலர் | ₹.11600 - 36800/- |
II. உள்துறை காலியிடங்கள் | |
8. திருமஞ்சனம் | ₹.11600 - 36800/- |
9. முறை ஸ்தானீகம் | ₹.10000 - 31500/- |
10. ஒடல் | ₹.15900 - 50400/- |
11. தாளம் | ₹.18500 - 58600/- |
III. தொழில்நுட்ப காலியிடங்கள் | |
12. தொழில்நுட்ப உதவியாளர் (மின்னனு & தொலைத் தொடர்பு) | ₹.20600 - 65500/- |
13. பிளம்பர் | ₹.18600 - 56900/- |
14. உதவி மின்பணியாளர் | ₹.16600 - 52400/- |
IV. அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி காலியிடங்கள் | |
15. தலைமை ஆசிரியர் | ₹.36700 - 116200/- |
16. தேவார ஆசிரியர் | ₹.35400 - 112400/- |
17. சங்கீத இசை ஆசிரியர் | ₹.35400 - 112400/- |
18. ஆகம ஆசிரியர் | ₹.35900 - 113500/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு (01.07.2024) |
---|---|
I. வெளித்துறை காலியிடங்கள் | |
1. தட்டச்சர் | 18 - 45 |
2. காவலர் | 18 - 45 |
3. கூர்க்கா | 18 - 45 |
4. ஏவலாள் (பண்ணை சாகுபடி) | 18 - 45 |
5. உபகோயில் பெருக்குபவர் | 18 - 45 |
6. கால்நடை பராமரிப்பாளர் | 18 - 45 |
7. உபகோயில் காவலர் | 18 - 45 |
II. உள்துறை காலியிடங்கள் | |
8. திருமஞ்சனம் | 18 - 45 |
9. முறை ஸ்தானீகம் | 18 - 45 |
10. ஒடல் | 18 - 45 |
11. தாளம் | 18 - 45 |
III. தொழில்நுட்ப காலியிடங்கள் | |
12. தொழில்நுட்ப உதவியாளர் (மின்னனு & தொலைத் தொடர்பு) | 18 - 45 |
13. பிளம்பர் | 18 - 45 |
14. உதவி மின்பணியாளர் | 18 - 45 |
IV. அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி காலியிடங்கள் | |
15. தலைமை ஆசிரியர் | 18 - 45 |
16. தேவார ஆசிரியர் | 18 - 45 |
17. சங்கீத இசை ஆசிரியர் | 18 - 45 |
18. ஆகம ஆசிரியர் | 18 - 45 |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு 28.02.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:-
இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை - 606 601.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம் | க்ளிக் செய்க |
--- | |
கடைசி தேதி | 28.02.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments