திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய சுகாதார குழும திட்டத்தில் காலியாக உள்ள காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tiruchirappalli.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் |
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை, திருச்சிராப்பள்ளி |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 16 |
கடைசி தேதி | 13.12.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
S.No. | வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|---|
1. | பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) | 02 |
2. | Programme cum Administrative Assistant | 01 |
3. | Quality Manager | 01 |
4. | Lab Technician (DEIC) | 01 |
5. | Physiotherapist | 01 |
6. | பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | 02 |
7. | பாதுகாவலர் | 01 |
8. | துப்புரவு உதவியாளர் | 01 |
9. | OT Assistant | 01 |
10. | Medical Officer | 01 |
11. | Senior Tuberculosis | 01 |
12. | Health Visitor (TB) | 01 |
13. | Lab Technician (காசநோய்) | 02 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. பல்நோக்கு சுகாதார பணியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 2 வருட பல்நோக்கு பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Programme cum Administrative Assistant: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை கணிணி அறிவியல் படிப்பு / கணிணி பயன்பாடு பட்டயபடிப்பு / முதுகலை கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு - தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Quality Manager: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Dental / AYUSH Paramedical Degree with Master in Hospital Administration / Health Management / Publick Health தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Lab Technician (DEIC): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Physiotherapist: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.P.T (Bachelor in Physiotherapy) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
7. பாதுகாவலர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
8. துப்புரவு உதவியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
9. OT Assistant: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் OT Assistant Course பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
10. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
11. Medical Officer: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை மருத்துவர் படிப்பு M.B.B.S. முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். Compulsory Rotary Internship, Diploma / M.D. Public Health / P.S.M. / Community Medicine / CHA / Tuberculosis & Chest Diseases - 1 year experience in NTEP.
12. Senior Tuberculosis Laboratory Supervisor (TB): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Graduate அல்லது Diploma in Medical Laboratory Technology அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் வேண்டும். கணிணி இயக்குவதில் 3 மாத சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
13. Health Visitor (TB): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை அறிவியல் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Intermediate (10+2) in Science & Experience of working as MPW / LHV / ANM / HW / Certificate or Higher Course in Health Education / Counselling or Tuberculosis Health Visitors recognized course & Certificate course in Computer Operation (Minimum 2 months).
14. Lab Technician (காசநோய்): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
S.No. | வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|---|
1. | பல் நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) | ₹.14,000/- |
2. | Programme cum Administrative Assistant | ₹.12,000/- |
3. | Quality Manager | ₹.60,000/- |
4. | Lab Technician (DEIC) | ₹.13,000/- |
5. | Physiotherapist | ₹.13,000/- |
6. | பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | ₹.8500/- |
7. | பாதுகாவலர் | ₹.8500/- |
8. | துப்புரவு உதவியாளர் | ₹.8500/- |
9. | OT Assistant | ₹.11,200/- |
10. | Medical Officer | ₹.60,000/- |
11. | Senior Tuberculosis | ₹.19,800/- |
12. | Health Visitor (TB) | ₹.13,300/- |
13. | Lab Technician (காசநோய்) | ₹.13,000/- |
வயது வரம்பு விபரம்:
S.No. | வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|---|
1. | பல் நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) | 59 வயதுக்குள் |
2. | Programme cum Administrative Assistant | 59 வயதுக்குள் |
3. | Quality Manager | 59 வயதுக்குள் |
4. | Lab Technician (DEIC) | 59 வயதுக்குள் |
5. | Physiotherapist | 59 வயதுக்குள் |
6. | பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | 59 வயதுக்குள் |
7. | பாதுகாவலர் | 59 வயதுக்குள் |
8. | துப்புரவு உதவியாளர் | 59 வயதுக்குள் |
9. | OT Assistant | 59 வயதுக்குள் |
10. | Medical Officer | 59 வயதுக்குள் |
11. | Senior Tuberculosis | 59 வயதுக்குள் |
12. | Health Visitor (TB) | 59 வயதுக்குள் |
13. | Lab Technician (காசநோய்) | 59 வயதுக்குள் |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
துணை இயக்குநர் (காச நோய்), மாவட்ட காசநோய் மையம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், புத்தூர், திருச்சி - 620017.
கடைசி தேதி: 13.12.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments