Ad Code

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் வேலை வாய்ப்பு

Karur DHS Recruitment 2024

கரூர் மாவட்டத்தில் உள்ள இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் அரசு மருத்துமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், ஓமியோபதித்துறையின் கீழ் இயங்கிவரும் ஆயூஷ் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள், மாவட்ட காசநோய் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள், துணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம், திருச்சிராப்பள்ளியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://karur.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை,
கரூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர்
பல்வேறு
காலியிடங்கள் 06
கடைசி தேதி 05.12.2024
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-
S.No. வேலையின் பெயர் காலியிடம்
1. Audiologist 01
2. Ayush Doctor (Siddha) 01
3. Therapeutic Assistant (Female) 01
4. District Public Private Mix Coordinator 01
5. Lab Technician 01
6.RMNCH Counsellor01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Audiologist: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் RCI அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Bachelor Degree in Audiology and Speech Language Pathology / B.Sc., (Speech & Hearing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Ayush Doctor (Siddha): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் BSMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Therapeutic Assistant (Female): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Diploma in Nursing Therapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. District Public Private Mix Coordinator: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் P.G.Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Communication / ACSM / Public Private Partnership துறைகளில் ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். இரண்டு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

5. Lab Technician: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Intermediate (10+2) and Diploma or Certified course in Medical Laboratory Technology அல்லது அதற்கு சமமான படிப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NTEP அல்லது Sputum Smears Microscopy துறையில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

6. RMNCH Counsellor: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Master's / Bachelor's degree in Social Work / Public Administration / Psychology / Sociology / Home Science / Hospital & Health Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Health Sector அல்லது அதற்கு சமமான துறையில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:
S.No. வேலையின் பெயர் வயது வரம்பு
1. Audiologist 20 - 30 years
2. Ayush Doctor (Siddha) 59 வரை
3. Therapeutic Assistant (Female) 59 வரை
4. District Public Private Mix Coordinator அதிகபட்சம் 65 வயது
5. Lab Technician அதிகபட்சம் 65 வயது
6.RMNCH Counsellorஅதிகபட்சம் 35 வயது

பணிக்கான ஊதிய விவரம்:-
S.No. வேலையின் பெயர் ஊதியம்
1. Audiologist ₹.23,000/-
2. Ayush Doctor (Siddha) ₹.40,000/-
3. Therapeutic Assistant (Female) ₹.15,000/-
4. District Public Private Mix Coordinator ₹.26,500/-
5. Lab Technician ₹.13,000/-
6.RMNCH Counsellor₹.18,000/-


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கரூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் மாவட்டம், கரூர் - 639 007.

கடைசி தேதி: 05.12.2024




Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments