Ad Code

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு

Tirupathur Child Protection Recruitment 2024

திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில், இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.11.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tirupathur.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் குழந்தைகள் நலன் மற்றும்
சிறப்புச் சேவைகள் துறை,
திருப்பத்தூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர்
1. சமூகப்பணியாளர்
காலியிடங்கள 02
கடைசி தேதி 24.11.2024
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
சமூகப்பணியாளர் 02

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. சமூகப்பணியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்பு ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்..

வயது வரம்பு விபரம்:

35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
சமூகப்பணியாளர் --


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்:300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010.

கடைசி தேதி: 24.11.2024





Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments