கடலூர் மாவட்டம், அரசு தலைமை மருத்துவமனையில் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 24 மணி நேரம் அனைத்து நாட்களிளும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவ உதவி, சட்ட உதவி, காவல்துறை உதவி, உளவியல் ஆலோசனை, மீட்பு மற்றும் தங்கும் வசதி ஆகியவற்றை செய்து தர சமூகப் பணியாளர் பணியிடத்தினை நியமனம் செய்வதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.11.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cuddalore.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் |
சகி - ஒருங்கிணைந்த சேவை மையம், கடலூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
1. சமூகப் பணியாளர்
|
காலியிடங்கள | 01 |
கடைசி தேதி | 25.11.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
சமூகப் பணியாளர் | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. சமூகப் பணியாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சமூகப்பணி, ஆலோசனை, மனநலம் குழந்தைகள் / பெண்கள் மேம்பாடு அல்லது நிர்வாக மேம்பாட்டில் இளங்களை பட்டம் பெற்று குறைந்த பட்சம் 2-வருடம் பெண்களுக்கெதிரான வன்முறை சம்மந்தப்பட்ட அரசு அல்லது அரசு சாராதொண்டு நிறுவங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்வி தகுதிகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 24 மணிநேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு விபரம்:
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
சமூகப்பணியாளர் | ₹.18,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூர் - 607001.
கடைசி தேதி: 25.11.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments