Ad Code

சமூக நலத்துறையில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு

Social Welfare Department Recruitment 2024

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.11.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://coimbatore.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் சமூக நலத்துறை,
கோயம்புத்தூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர்
1. வழக்கு பணியாளர்
2. பாதுகாவலர்
3. பல்நோக்கு உதவியாளர்
காலியிடங்கள் 05
கடைசி தேதி 20.11.2024
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. வழக்கு பணியாளர் 02
2. பாதுகாவலர் 01
3. பல்நோக்கு உதவியாளர் 02

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Case Worker: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Master of Social Work (MSW), M.A./M.Sc.Sociology, M.A/M.Sc Psychology / Clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 மணிநேர சுழற்சி முறையில் பணி செய்ய ஆர்வமுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம்.

2. பாதுகாவலர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 மணிநேர சுழற்சி முறையில் பணி செய்ய ஆர்வமுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம்.

3. பல்நோக்கு உதவியாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 மணிநேர சுழற்சி முறையில் பணி செய்ய ஆர்வமுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம்.

வயது வரம்பு விபரம்:

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
1. வழக்கு பணியாளர் ₹.18,000/-
2. பாதுகாவலர் ₹.12,000/-
3. பல்நோக்கு உதவியாளர் ₹.10,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

District Social Welfare Officer, District Collectorate Campus, Old Building, Ground Floor, Coimbatore - 641018.

கடைசி தேதி: 20.11.2024



Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments