Ad Code

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

 Thoothukkudi NPRD Recruitment 2024

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கவர்ணகிரி வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணிமண்டங்களில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம்செய்தி மக்கள் தொடர்புத்துறை
வகைTN Govt Jobs
பணியின் பெயர்நூலகர் மற்றும் காப்பாளர்
(Librarian Cum Caretaker)
காலியிடங்கள்03
கடைசி தேதி18.10.2024
விண்ணப்ப முறைதபால்
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர்காலியிடம்
1. நூலகர் மற்றும் காப்பாளர்
(Librarian Cum Caretaker)
03
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் (Certificate in Library and Information Science (CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர்வயது வரம்பு
1. நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker)01.07.2024 அன்றுள்ளவாறு BC 18-34, MBC 18-34, SC 18-37
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர்ஊதியம்
1. நூலகர் மற்றும் காப்பாளர்
(Librarian Cum Caretaker)
₹.7700 - 24,200/-
Special Time Scale - 4
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித்தகுதி, அனுபவத்தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தூத்துக்குடி மாவட்டம் - 628 101.

கடைசி தேதி: 18.10.2024


Join our below-given groups for all the latest Jobs
WhatsappTelegram
FacebookYoutube
Twitter

Post a Comment

0 Comments