மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் அலுவலகத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

Thoothukkudi Recruitment 2024

தூத்துக்குடி மாவட்ட காலநிலை மாற்ற இயக்க திட்டத்தில் பணிபுரிய தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர் (Technical Staff / Field Staff) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் தொழில்நுட்ப உதவியாளர் /
களப்பணியாளர்
(Technical Staff / Field Staff)
காலியிடங்கள் 01
கடைசி தேதி 10.10.2024
விண்ணப்ப முறை தபால்
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. தொழில்நுட்ப உதவியாளர் /
களப்பணியாளர்
(Technical Staff / Field Staff)
01
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர் (Technical Staff / Field Staff): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு (Typewritting) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர்
(Technical Staff / Field Staff)
குறிப்பிடவில்லை
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
1. தொழில்நுட்ப உதவியாளர் /
களப்பணியாளர்
(Technical Staff / Field Staff)
₹.20,000/-
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித்தகுதி, அனுபவத்தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட வன அலுவலர், மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம், மாவட்ட வன அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தூத்துக்குடி மாவட்டம்.

கடைசி தேதி: 10.10.2024


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter