Ad Code

சென்னை அஞ்சல் துறையில் ITI , 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கான நிரந்தர வேலை வாய்ப்பு

Chennai Post Recruitment

இந்திய அஞ்சல் துறை, சென்னை Mail Motor Service துறையில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.indiapost.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை,
சென்னை (Mail Motor Service)
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Skilled Artisans
காலியிடங்கள் 10
கடைசி தேதி 30.08.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://www.indiapost.gov.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. M.V. Mechanic 04
2. M.V. Electrician 01
3. Tyreman 01
4. Blacksmith 03
5. Carpenter 01


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Skilled Artisans:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வேலைக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் I.T.I தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (I.T.I தேர்ச்சி பெறாதவர்கள் அனுபவச் சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டும்). M.V.Mechanic பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் கனரக வாகன ஓட்டுநர் (HMV) உரிமம் வைத்திருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. M.V. Mechanic ₹.19,900 - 63,200/-
2. M.V. Electrician ₹.19,900 - 63,200/-
3. Tyreman ₹.19,900 - 63,200/-
4. Blacksmith ₹.19,900 - 63,200/-
5. Carpenter ₹.19,900 - 63,200/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

தகுதியான விண்ணப்பதாரர்கள் ₹.400/- (IPO) செலுத்த வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட துறையில் Competitive Trade Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு விரைவு தபால் அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai - 600 006.

அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 30.08.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter


Post a Comment

0 Comments