Ad Code

மீன்வளத் துறையில் வேலை வாய்ப்பு. 24 காலியிடங்கள். விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Sagar Mithra Recruitment 2024

பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை  மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ/வருவாய் கிராமங்களுக்கு 24 பல்நோக்கு சேவை பணியாளர்கள் (Sagar Mithra) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியியாகியுள்ளது. அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.06.2024-ம் தேதிக்குள் விண்ணப்பைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம்மீன்வளத் துறை
Notification No.-
வகைTN Jobs 
பணியின் பெயர்பல்நோக்கு சேவை பணியாளர்கள்
காலியிடங்கள்24
விண்ணப்பிக்க கடைசி தேதி21.06.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்
Websitehttps://chennai.nic.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 24 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. பல்நோக்கு சேவை பணியாளர்கள்  - 24 காலியிடம்.


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. பல்நோக்கு சேவை பணியாளர்கள்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology), மற்றும் Zoology ஆகிய பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemisty), நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany), மற்றும் உயிர் வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.


மேற்கண்ட பிரிவுகளிலும் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் 12-ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு / 12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு தேர்ச்சியுடன் தகவல் தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். நன்கு தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும்.


பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹.15,000/- வழங்கப்படும்.


பணிக்கான வயது வரம்பு விவரம்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 35-க்குள் இருக்க வேண்டும்.


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

விருப்பமுள்ள நபர்கள் 21.06.2024 அன்று மாலை 05:00 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிககு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், எண்.77, சூரியநாராயணா செட்டி தெரு, இராயபுரம், சென்னை - 13.


அறிவிப்பாணை

கடைசி தேதி: 21.06.2024

Join our below-given groups for all the latest Jobs
WhatsappTelegram
InstagramGoogle News
FacebookYoutube
Twitter

Post a Comment

0 Comments