மாவட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசு, சென்னை மாவட்ட சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர் (Case Worker), பாதுகாவலர் (Security Guard) மற்றும் பன்முக உதவியாளர் (Multipurpose Helper) ஆகிய பதவிளை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://chennai.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.06.2024.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம்மாவட்ட சமூக நலத்துறை
Notification No.-
வகைTN Govt Jobs
பணியின் பெயர்1. வழக்கு பணியாளர்
2. பாதுகாவலர்
3. பன்முக உதவியாளர்
காலியிடங்கள்03
விண்ணப்பிக்க கடைசி தேதி28.06.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்/மின்னஞ்சல்
Websitehttps://chennai.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. வழக்கு பணியாளர் - 01 காலியிடம்.
  2. பாதுகாவலர் - 01 காலியிடம்
  3. பன்முக உதவியாளர் - 01 காலியிடம்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. வழக்கு பணியாளர்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சமூக பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். மேலண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) அல்லது (Development Management)  பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டன்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவாகவும் இருக்க வேண்டும்.


2. பாதுகாவலர்:

அரசு அல்லஹ்டு புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.


3. பன்முக உதவியாளர்:

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


பணிக்கான வயது வரம்பு விபரம்:-

  1. வழக்கு பணியாளர் - 35-க்குள் இருக்க வேண்டும்.
  2. பாதுகாவலர் - குறிப்பிடவில்லை
  3. பன்முக உதவியாளர் - குறிப்பிடவில்லை


பணிக்கான ஊதிய விவரம்:-

  1. வழக்கு பணியாளர் - ₹.18,000/- மாதம்.
  2. பாதுகாவலர் - ₹.12,000/- மாதம்.
  3. பன்முக உதவியாளர் - ₹.10,000/- மாதம்.


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://chennai.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 28.06.2024 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட சமூகநல அலுவலர், 8-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிங்காரவேலவர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை - 01.

விண்ணப்பிக்க வேண்டிய e-mail ID: oscnorthchennai@gmail.com


அறிவிப்பாணை

விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 28.06.2024

Join our below-given groups for all the latest Jobs
WhatsappTelegram
InstagramGoogle News
FacebookYoutube
Twitter