Ad Code

அரசு கலைக் கல்லூரியில் நிரந்தரமான வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

அரசு கலைக் கல்லூரியில் நிரந்தரமான வேலை வாய்ப்பு:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, கும்பகோணம், தஞ்சாவூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://thanjavur.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரியில் நிரந்தரமான வேலை வாய்ப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் அரசு கவின் கலைக் கல்லூரி,
கும்பகோணம், தஞ்சாவூர்
Notification No. 644/அ2/2022
நாள்.20.02.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
(Office Assistant)
காலியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2023
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
Website https://thanjavur.nic.in

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை. உடனே விண்ணப்பியுங்கள்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. அலுவலக உதவியாளர் - 02 காலியிடங்கள்

அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.07.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,700 - 50,000/- Level-1-ன் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணியானது இட ஒதுக்கீடு மற்றும் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆதிதிராவிடர் அருந்ததியினர் SC(A) ஆதரவற்ற விதவைகள் (பெண்களுக்கு) ஒரு காலியிடம், பொதுப்பிரிவினர் (GT) ஆதரவற்றோர் பிரிவினருக்கு ஒரு காலி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thanjavur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கவனமாக படித்துவிட்டு விண்ணப்பப் படிவத்தையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்ற விபரங்களை கவனமாக பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ்களின் நகல்கள், ஜாதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இட ஒதுக்கீடு கோரும் சான்றிதழ்களின் நகல், அனுபவச் சான்றிதழ் நகல், மற்றும் பிற சான்றிதழ்கள் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.03.2023 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். மேலும், சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The Principal (i/c),Government College of Fine Arts,
Melakavery Post,
Swamimalai Main Road,
Kumbakonam-2.

Download Notification and Application Form

கடைசி தேதி: 15.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments