மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு:- கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer) மற்றும் உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ பத்திரிகை செய்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://coimbatore.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.03.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர் |
Notification No. | செ.வெ.எண்.49 நாள்.27.02.2023 |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://coimbatore.nic.in/ |
அரசு கலைக் கல்லூரியில் நிரந்தரமான வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer) - 01 காலியிடம்
- உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) - 01 காலியிடம்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
Legal Cum Probation Officer:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் LLB பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Cum Data Entry Operator:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Diploma in Computer Application பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை (Typewritting Tamil and English Senior Level) தகுதியை முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 15.03.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
Legal Cum Probation Officer:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.27,804/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Cum Data Entry Operator:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.13,240/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் கோவை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் கல்வி சான்று, ஜாதி சான்று, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, அனுபவ சான்று. இருப்பிட சான்று, மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை சுய ஒப்பமிட்டு புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக பெறப்படும் மற்றும் உரிய சான்றிதழ்கள் இன்று சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம்,
பழைய கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர்-18.
Download Notification PDF
Download Application Form
கடைசி தேதி: 15.03.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments