Ad Code

சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு:- திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரில் இரண்டு வாணியம்பாடியில் இரண்டு மற்றும் திருப்பத்தூரில் ஒன்று என மொத்தம் ஐந்து நகர்ப்புற நல மையங்களுக்கு காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு திருப்பத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://tirupathur.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.02.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thirupathur District Health Society Recruitment 2023
சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திருப்பத்தூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://tirupathur.nic.in/

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 15 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. மருத்துவ அலுவலர் - 05 காலியிடங்கள்
  2. பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் (ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்) - 05 காலியிடங்கள்
  3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 05 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

மருத்துவ அலுவலர்

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயம் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் (ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்)

12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்). பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர்/ துப்புரவு ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதாரத்துறை இயக்குனர் அவர்களால் வழங்கப்படும் சான்று பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

மருத்துவ அலுவலர்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

பணிக்கான ஊதிய விவரம்:-

  1. மருத்துவ அலுவலர் - Rs.60,000/- Per Month
  2. சுகாதார ஆய்வாளர் - Rs.14,000/- Per Month
  3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - Rs.8,500/- Per Month

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான https://tirupathur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 25.02.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
சேர்மன் லட்சுமணன் தெரு,
திருப்பத்தூர் - 601.

Download Notification PDF

கடைசி தேதி: 25.02.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments