தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வேலைவாய்ப்பு. பதவிகள், கல்வித்தகுதி, வயது, சம்பளம் மற்றும் பிற தகவல்களுடன்!!!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வேலைவாய்ப்பு. பதவிகள், கல்வித்தகுதி, வயது, சம்பளம் மற்றும் பிற தகவல்களுடன்!!! |
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வேலைவாய்ப்பு: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், சென்னையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை www.hrce.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகள் அனைத்தும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.12.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | இந்து சமய அறநிலைய துறை, சென்னை |
வகை | tnhrce recruitment |
பணியின் பெயர் | பல்வேறு பணிகள் |
காலியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE CHENNAI பணிக்கான காலியிடங்கள்:
காலிப் பணியிடங்களுக்கான விபரங்கள் பின்வருமாறு.
TNHRCE CHENNAI பணிக்கான கல்வித்தகுதி:
ஓட்டுநர்:-
8-ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் வைத்திருக்கவேண்டும். ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தபேதார்:-
8-ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவி மின் பணியாளர்:-
அரசால்/அரசால் அங்கீகர்க்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/மின் கம்பியாளர் பாடப்பிரிவில் (Electrical / Wireman Trade) தொழிற் பயிற்சி நிறுவனச்சான்றிதழ் (I.T.I) பெற்றிருக்க வேண்டும்.
வேதபாராயணம்:-
தமிழ் மொழியில் எழதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
காவலர்:-
தமிழ் மொழியில் எழதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவி சுயம்பாகம்:-
தமிழ் மொழியில் எழதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும், கோயில்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பரிசாரகம்:-
தமிழ் மொழியில் எழதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும், கோயில்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையலர்:-
தமிழ் மொழியில் எழதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் உதவியாளர்:-
தமிழ் மொழியில் எழதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்புரவாளர்:-
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். துப்புரவு பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கான வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கான ஊதிய விவரம்:
TNHRCE CHENNAI பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் மேலும் விண்ணப்ப படிவத்துடன் தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கு இணைக்கப்பட வேண்டிய சான்றிதகளின் நகல்:
TNHRCE CHENNAI பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்,
திருவொற்றியூர்,
சென்னை-19.
கடைசி தேதி: 19.12.2022
Join our below-given groups for all the latest Jobs
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
0 Comments