கோவை மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு முழு தகவல்களுடன்!
கோவை மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு முழு தகவல்களுடன்! |
கோவை மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு: கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதார பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள நகர /துணை சுகாதார செவிலியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கோயம்புத்தூர் மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியானவர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு நேர்காணல் நடைபெறும் தேதி 08.11.2022
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | கோயம்புத்தூர் மாநகராட்சி |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | நகர / துணை சுகாதார செவிலியர்கள் |
காலியிடங்கள் | 16 |
நேர்காணல் தேதி | 08.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
நகர / துணை சுகாதார செவிலியர் பணிக்கான காலியிடங்கள்:
இந்தப் பணிக்கு மொத்த காலியிடங்கள் 16 என கோயம்புத்தூர் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர / துணை சுகாதார செவிலியர் பணிக்கான கல்வித்தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி டிப்ளமோ துணை சுகாதார செவிலியர்கள் (Auxiliary Mid Wives) தேர்ச்சி பெற்று தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர / துணை சுகாதார செவிலியர் பணிக்கான வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர / துணை சுகாதார செவிலியர் பணிக்கான ஊதிய விவரம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியம் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர / துணை சுகாதார செவிலியர் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இத பணிக்கென எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர / துணை சுகாதார செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் முற்றிலும் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர / துணை சுகாதார செவிலியர் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா பணியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலின் போது கல்விச் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல், இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, ஜாதி சான்றிதழ் மற்றும் கொரோனா பணி சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகர / துணை சுகாதார செவிலியர் பணிக்கான நேர்காணல் நடைபெறும் இடம் :
கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம்
நேர்காணல் தேதி: 08.11.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments