தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வேலைவாய்ப்பு. முழுத்தகவல்கள்!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வேலைவாய்ப்பு. முழுத்தகவல்கள்! |
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வேலைவாய்ப்பு: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை hrce.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகள் அனைத்தும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 17.11.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | இந்து சமய அறநிலைய துறை |
வகை | tnhrce recruitment |
பணியின் பெயர் | பல்வேறு பணிகள் |
காலியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE CHENNAI பணிக்கான காலியிடங்கள்:
காலிப் பணியிடங்களுக்கான விபரங்கள் பின்வருமாறு.
TNHRCE CHENNAI பணிக்கான கல்வித்தகுதி:
கணினி இயக்குபவர்:- அரசு நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் (Diploma in Computer Science) கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
மின் பணியாளர்:- அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின் தொழில் பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ (ITI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், மின் உரிமம் வாரியத்தின் B சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அர்ச்சகர்:- தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு படிப்பினை படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஓதுவார்:- தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப் பாடசாலையில் இதன் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பு படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சுயம்பாகி:- தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திருக்கோயில்களில் பூஜை மற்றும் சடங்குகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
மேளக்குழு:- தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது தமிழ்நாடு அரசு நிறுவனம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
பகல் காவலர்:- தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
இரவு காவலர்:- தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
துப்புரவாளர்:- தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். துப்புரவு பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
TNHRCE CHENNAI பணிக்கான வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கான ஊதிய விவரம்:
TNHRCE CHENNAI பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TNHRCE CHENNAI பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் மேலும் விண்ணப்ப படிவத்துடன் தொடர்புடைய சான்றிதழ்கள் சுய ஒப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
TNHRCE CHENNAI பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
இராயப்பேட்டை,
சென்னை-14
கடைசி தேதி: 17.11.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments