கோவை மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவகத்தில் வேலை வாய்ப்பு | Refrigeration Mechanic Post |
கோவை மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவகத்தில் வேலை வாய்ப்பு: கோயம்புத்தூர் மாவட்டம் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் Cold Storage Unit-ல் காலியாக உள்ள Refrigeration Mechanic பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கபடுவதற்கு பத்திரிகை செய்தி கோவை மாவட்ட கலெக்டர் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த பத்திரிக்கை செய்தியை coimbatore.nic.in மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.10.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கோவை மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவகத்தில் வேலைவாய்ப்பு |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
துறை | துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், கோவை மாவட்டம் |
பணியின் பெயர் | Refrigeration Mechanic |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
Refrigeration Mechanic பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Refrigeration Mechanic பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்தபட்ச கல்வித்தகுதி Certificate Course in ITI Mechanic in Regrigeration & Air Conditioning படித்திருக்க வேண்டும். மேலும், இப்பணி தொடர்பாக குறைந்தபட்சம் 1 வருட முன் அனுபவம் இருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Refrigeration Mechanic பணிக்கான வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறந்தபட்ச வயது வரம்பு 21 வயதிலிருந்து அதிகபட்ச வயது 35-ற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Refrigeration Mechanic பணிக்கான ஊதிய விவரம்:
இந்த பணிக்கு தேர்தெடுக்கப்படும் நபருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.20,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Refrigeration Mechanic பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கென விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Refrigeration Mechanic பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியானது நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என பத்திரிக்கைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Refrigeration Mechanic பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பபிக்க விருப்புபவர்கள் கோவை மாவட்ட இணையதளமான coimbatore.nic.in என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து, அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 08.10.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் பந்தைய சாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு 19.10.2022-ம் தேதி காலை 10.00 மணிக்கு துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்.
Refrigeration Mechanic பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
துணை சுகாதாரப் பணிகள் அலுவலகம், பந்தைய சாலை, கோயம்புத்தூர்.
நேர்காணல் தேதி:19.10.2022
கடைசி தேதி:08.10.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments