Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலைவாய்ப்பு | வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகள் | காலியிடங்கள் 14 | பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அரியலூர் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அழகின் கீழ் செயல்பட்டுவரும் ஆறு வட்டாரங்களில் உள்ள 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய பத்திரிக்கை செய்தி 16.09.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம்.

இந்த பணிகளுக்கான பத்திரிக்கை செய்தியை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.09.2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

tnsrlm recruitment 2022

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
பணியின் பெயர் வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிக்கு காலியிடங்கள் 14 அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் M.S.Office-ல் குறைந்தபட்சம் ஆறு மாத கணினி திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் 01.09.2022 அன்றைய தேதியின்படி அதிகபட்ச வயது 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 12 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக ஏதும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிகளுக்கு எந்தவித தேர்வும் எழுத வேண்டியதில்லை. இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் மட்டுமே நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரியலூர் மாவட்ட இணையதளமான www.ariyalur.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பத்திரிகை செய்தியை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை நீங்கள் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

திட்ட இயக்குனர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட ஆட்சியரகம்,
அரியலூர் 704.

Download Notification PDF

கடைசி தேதி:30.09.2022

Join our below-given groups for all the latest Jobs

Join Our Whatsapp Group
Join our Telegram Group

Post a Comment

0 Comments