தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மிசன் வாட்சாலயா வழிகாட்டுதல் படி அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (Protection Officer Non Institutional Care) பணியிடத்தினை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ariyalur.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, அரியலூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
பாதுகாப்பு அலுவலர்
|
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 18.12.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
S.No. | வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|---|
1. | பாதுகாப்பு அலுவலர் | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. பாதுகாப்பு அலுவலர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் முதுகலையில் சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / குழந்தைகள் வளர்ச்சி (Child Development) / மனித உரிமை பொது நிர்வாகம் (Human Rights Public Administration) / உளவியல் (Psychology) / மனநலம் (Psychiatry) / சட்டம் (Law) / பொது சுகாதாரம் (Public Health) / சமூகவள மேலாண்மை (Community Resource Management) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும். அல்லது
இளங்கலையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் (Recognized University) சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / குழந்தைகள் வளர்ச்சி (Child Development) / மனித உரிமை பொது நிர்வாகம் (Human Rights Public Administration) / உளவியல் (Psychology) / மனநலம் (Psychiatry) / சட்டம் (Law) / பொது சுகாதாரம் (Public Health) / சமூகவள மேலாண்மை (Community Resource Management) / பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி களப்பணியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை (Implementation, Monitoring and Supervising in the preferably / The field of Woman and Child Development) / சமூகநலம் (Social Welfare) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும் மற்றும் திட்டங்கள் உருவாக்குவதில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராகவும், கணினி இயக்குவதில் திறமை வாய்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
ஊதிய விபரம்:
S.No. | வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|---|
1. | பாதுகாப்பு அலுவலர் | ₹.27,804/- |
வயது வரம்பு விபரம்:
S.No. | வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|---|
1. | பாதுகாப்பு அலுவலர் | 18 - 42 |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரியலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் - 621 704.
கடைசி தேதி: 18.12.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments