தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம்-தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் பணிபுரிய முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், ஆய்வக நுட்புநர், மற்றும் காசநோய் சுகாதார பார்வையாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.11.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://thanjavur.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் |
மாவட்ட சுகாதார சங்கம், தஞ்சாவூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
1. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
2. ஆய்வக நுட்புநர்
3. காசநோய் சுகாதார பார்வையாளர்
|
காலியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 23.11.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் | 01 |
2. ஆய்வக நுட்புநர் | 01 |
3. காசநோய் சுகாதார பார்வையாளர் | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Graduate or Diploma in Medical Laboratory Technology அல்லது அதற்கு சமமான படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனம் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இரண்டு மாத கணினி படித்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
2. ஆய்வக நுட்புநர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10+2 தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது Medical Laboratory Technology சான்றிதழ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும்.
3. காசநோய் சுகாதார பார்வையாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Graduate in Science or Intermediate (10+2) in Science பெற்றிருக்க வேண்டும். Experience of working as MPW / LHV / ANM / Health Worker / Certificate or Higher Course in Health Education / Counselling or Tuberculosis Health Visitor's recognized course and Certificate course in Computer Operation (Minimum 2 months)..
வயது வரம்பு விபரம்:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் | ₹.19,800/- |
2. ஆய்வக நுட்புநர் | ₹.13,000/- |
3. காசநோய் சுகாதார பார்வையாளர் | ₹.13,300/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்) மாவட்ட காசநோய் மையம், இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகம், தஞ்சாவூர் - 613001.
கடைசி தேதி: 23.11.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments