Ad Code

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு!

Trichy HRCE Recruitment

இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளியில் காலியாக உள்ள உதவி சமையல்காரர் பணியித்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் உதவி சமையல்காரர்
காலியிடங்கள் 01
கடைசி தேதி 01.09.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://hrce.tn.gov.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. உதவி சமையல்காரர் 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. உதவி சமையல்காரர்

இந்த பதவிக்கென கல்வித் தகுதி விபரங்கள் குறிப்பிடவில்லை.


வயது வரம்பு விபரம்:

விண்ணப்பதாரர் 01.07.2024-ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கென ஊதிய விபரங்கள் குறிப்பிடவில்லை.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox Copies Only) பெற்று அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும். மேலும், ₹.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

உதவி சமையல்காரர் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு "உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620 005" என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 01.09.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments