மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் ₹. 34,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

Pudukkottai Recruitment 2024

புதுக்கோட்டை மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், மருந்து வழங்குநர் மற்றும்  பல்நோக்கு பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது.


அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://pudukkottai.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. மருத்துவ அலுவலர்
2. மருந்து வழங்குநர்
3. பல்நோக்கு பணியாளர்
காலியிடங்கள் 12
கடைசி தேதி 18.07.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://pudukkottai.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. மருத்துவ அலுவலர் (Siddha) 02
2. மருத்துவ அலுவலர் (Homeopathy) 01
3. மருந்து வழங்குநர் (Ayurvedha) 01
4. மருந்து வழங்குநர் (Homeopathy) 02
5. பல்நோக்கு பணியாளர் 06

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. மருத்துவ அலுவலர் (Siddha):

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's of Siddha Medicine and Surgery (or) M.D. (Siddha) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


2. மருத்துவ அலுவலர் (Homeopathy):

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's of Homeopathy Medicine and Surgery பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


3. மருந்து வழங்குநர் (Ayurvedha / Homeopathy):

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Integrated Pharmacy (or) Diploma in Pharmacy (Ayurvedha / Homeopathy) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


4. பல்நோக்கு பணியாளர்::

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு விபரம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.


பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. மருத்துவ அலுவலர் ₹. 34,000/-
2. மருந்து வழங்குநர் தினக்கூலி ₹. 750/-
3. பல்நோக்கு பணியாளர் தினக்கூலி ₹. 300/-


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை - 622 001.

அறிவிப்பாணை

விண்ணப்பப்படிவம்


கடைசி தேதி: 18.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter