கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் (கொச்சி கப்பல் கட்டும் தளம்) 34 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொச்சி ஷிப்யார்ட் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.06.2024 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://cochinshipyard.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பைப் பதிவிறக்கலாம்.
வேலை வாய்ப்பு அறிவிக்கைகள் 2024 |
---|
நிறுவனம் | Cochin Shipyard Limited |
பணியின் பெயர் | Safety Assistant |
காலியிடங்கள் | 34 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் காலிபணியிட விவரம்:
Cochin Shipyard Limited-ன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Safety Assistant இந்த பணிகளுக்கான மொத்த காலியிடங்கள் 34 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி விபரங்கள்:
அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனம் அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து ஒரு வருட Safety / Fire டிப்ளமோ.தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பொதுத்துறை நிறுவனத்தில் (அல்லது) தொழிற்சாலை (அல்லது) கட்டுமான நிறுவனம் அல்லது பொறியியல் நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒரு வருட பயிற்சி அல்லது பாதுகாப்பு அனுபவம்.
வயது வரம்பு விபரங்கள்:
11.06.2024 இன் படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதாவது விண்ணப்பதாரர்கள் 12.06.1994 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.
OBC (கிரீமி லேயர் அல்லாத) விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 03 ஆண்டுகளும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
ஊதிய விபரங்கள்:
மேற்கண்ட தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 1 ஆம் ஆண்டு மாதம் ₹.23,300/-, 2 ஆம் ஆண்டு மாதம் ₹.24,000/- மற்றும் 3 ஆம் ஆண்டு ₹.24,800/- வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தேர்வு முறையானது நடைமுறைத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் மூலம் 100% வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, இறுதித் தேர்வுக்கு அதற்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.cochinshipyard.in (Career Page -> CSL, Kochi) என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கவும்.
0 Comments