சுகாதார பணிகள் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு:- புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள குளிர் பதன கம்மியர் Refrigeration Mechanic மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் புதுக்கோட்டை அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட பொது சுகாதார சங்கத்தின் ஆய்வகத்தில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் (Lab Technician) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பபடிவத்தை https://pudukkottai.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.04.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் | |
---|---|
நிறுவனம் | மாவட்ட நல வாழ்வு சங்கம், புதுக்கோட்டை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | 1. Refrigeration Mechanic 2. Lab Technician |
காலியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 15.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://pudukkottai.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி | காலியிடங்கள் |
---|---|
Refrigeration Mechanic | 01 |
Lab Technician | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
Refrigeration Mechanic:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கே ஏற்கப்பட்ட தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் ITI - Refrigeration Mechanic and Air Conditioning பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் சம்பந்தப்பட்ட துறையில் பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய சான்றிதழ் நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Lab Technician:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் 12-ஆம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மருத்துவ கல்வி இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் DMLT பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட முன் அனுபவம் இந்த துறையில் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
Refrigeration Mechanic:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு துறையால் நியமிக்கப்பட்ட வயது பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Lab Technician:-
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
பதவி | ஊதியம் |
---|---|
Refrigeration Mechanic | Rs.20,000/- Per Month |
Lab Technician | 13,000/- Per Month |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://pudukkottai.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து 15.04.2023 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,
மதுரை ரோடு,
புதுக்கோட்டை - 622 001.
Notification | Click Here |
Application Form | Click Here |
கடைசி தேதி | 15.04.2023 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments