Ad Code

தமிழ்நாடு அஞ்சல் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு:- தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://tamilnadupost.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அஞ்சல் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் தமிழ்நாடு அஞ்சல் துறை
Notification No. MSE / B9-2 / XV /2021
Date: 27.02.2023
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Staff Car Driver
காலியிடங்கள் 58
கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://tamilnadupost.nic.in

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 58 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Staff Car Driver - 58 காலியிடங்கள்

Staff Car Driver பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகுரக (LMV) மற்றும் கனரக மோட்டார் (HMV) வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் வாகனங்களில் ஏற்படும் சிறு பழுதுகளை சரிசெய்ய தெரிந்து வைத்திருக்க வேண்டும்

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 வருட இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகனங்களை ஓட்டுயமைக்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது பொது மற்றும் EWS பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள்ளும், SC / ST பிரிவினருக்கு ஐந்து வருட வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும் எனவும், OBC பிரிவினருக்கு மூன்று வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.19,900 - 63,200/- (Level-2) மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

விண்ணப்ப படிவத்துடன் இந்தியன் போஸ்டல் ஆர்டர் (Indian Postal Order) ரூபாய்.100/- அல்லது யூசிஆர் (UCR Receipt) ஏதாவது ஒரு அஞ்சலகத்தில் பெறப்பட்டதை இணைத்து அனுப்ப வேண்டும். SC / ST / பெண்கள் பிரிவினர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://tamilnadupost.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 31.03.2023 ஆம் தேதிக்குள் விரைவு தபால் அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவு தபால் மற்றும் பதிவு அஞ்சல் மூலமாக கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். வேறு முறையில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The Senior Manager (JAG),
Mail Motor Service,
No.37, Greams Road,
Chennai - 600 006.
Notification Click Here
கடைசி தேதி 31.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments