Ad Code

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் வேலை வாய்ப்பு:- அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவமனை மேலாண்மை அலுவலர் (Hospital Quality Manager) பணியிடத்தினை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை https://thoothukudi.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் மருத்துவக் கல்வி இயக்குநரகம், தூத்துக்குடி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் மருத்துவமனை மேலாண்மை அலுவலர்
(Hospital Quality Manager)
காலியிடங்கள் 01
கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://thoothukudi.nic.in

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. மருத்துவமனை மேலாண்மை அலுவலர் (Hospital Quality Manager) - 01 காலியிடம்

Hospital Quality Manager பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் (a). Masters in Hospital Administration / Health Management / Public Health பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொலைதூர கல்வி / திறந்தவெளி பல்கலைக் கழகம் / ஆன்லைன் இவற்றின் மூலம் பட்டம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க தகுதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவமனை மேலாண்மை அலுவலர் பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Hospital Quality Manager பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.60,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hospital Quality Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறந்த நாள் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் இரண்டு புகைப்படத்தை இணைத்து 31.03.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

முதல்வர்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
தூத்துக்குடி.

Notification Click Here
கடைசி தேதி 31.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments