தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலை வாய்ப்பு:- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள Social Security Assistant (SSA), Stenographer பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 27.03.2023 முதல் 26.04.2023 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை https://www.epfindia.gov.in/site_en/index.php என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.04.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | 1. Social Security Assistant (SSA) 2. Stenographer |
காலியிடங்கள் | 2859 |
கடைசி தேதி | 26.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://www.epfindia.gov.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 2859 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Social Security Assistant (SSA) - 2676 காலியிடங்கள்
- Stenographer - 185 காலியிடங்கள்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Social Security Assistant (SSA)
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு இளங்கலைப் பட்டம் (Any Bachelor's Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு ஆங்கிலத்தில் 35 wpm செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
2. Stenographer
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை பார்க்கவும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு ஐந்து வருட வயது வரம்பு தளர்வும், OBC-NCL பிரிவினருக்கு மூன்று வருட வயது வரம்பு தளர்வும் அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பொதுப்பினர் பிரிவினருக்கு 40 வயது வரைக்கும், SC / ST பிரிவினருக்கு 45 வயது வரைக்கும், OBC-NCL பிரிவினருக்கு 43 வயது வரைக்கும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
1. Social Security Assistant (SSA)
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.Rs.29,200 - Rs.92,300/- (Level-5) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. Stenographer
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.Rs.25,500 - Rs.81,100/- (Level-4) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் பெண் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.700/- கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. SC / ST / PwBD / Female Candidates / Ex-servicemen ஆகிய பிரிவினர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Phase I - Examination, Phase-II - Computer Skill Test (Computer Data Entry Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் EPFO-ன் அதிகாரபூர்வ இணையதளமான https://www.epfindia.gov.in/ என்கிற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Apply Now
Notification 1 | Social Security Assistant (SSA) |
Notification 2 | Stenographer |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.04.2023 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments