மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை:-தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன்/தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 21.03.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தஞ்சாவூர் |
Notification No. | ந.க.எண்.அ1/2282/2022 நாள்.01.03.2023 |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
காலியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அரசு கலைக் கல்லூரியில் நிரந்தரமான வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அலுவலக உதவியாளர்
அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.07.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 34 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவினர்களுக்கு 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,700 - 50,000/- (Level-1)-ன் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். அதன்படி பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிமல்லாதோர்) அவர்களுக்கு ஒரு காலி இடமும், பொதுபிரிவினர் ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு ஒரு காலி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் பெண் விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிறை வழிகாட்டும் அலுவலகத்தில் நேரடியாக அணுகி விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை 21.03.2023 மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை சுயஒப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
உதவி இயக்குனர்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம்,
மணி மண்டபம் எதிரில்,
தஞ்சாவூர்.
கடைசி தேதி: 21.03.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments