Ad Code

மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு:- தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை மற்றும் மீனவர் நலத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.03.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2023
நிறுவனம் மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை
Notification No. Press Release No.27
Date.13.02.2023
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பணிகளுக்கான மொத்த காலியிடங்கள் தற்போது அறிவிக்கப்படவில்லை.

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's Degree in Fisheries Science / Marine Biology / Zoology. இந்தப் பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் மற்ற பட்டப்படிப்புகள் படித்தவர்கள் அதாவது Bachelor's Degree in Chemistry / Botany / Biochemistry / Microbiology / Physics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட மீன்பிடி தளத்தை சேர்ந்தவராகவும், உள்ளூர் நபராகவும் இருக்கவேண்டும் சம்பந்தப்பட்ட தாலுகா கிராமம், வருவாய் கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் அருகில் உள்ள மீன்பிடி வருவாய் கிராமம், தாலுகா ஆகியவற்றில் வசிப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 31.01.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பிங்கள்!!!

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கான விண்ணப்ப படிவத்தை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 05.03.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Office of the Assistant Director of Fisheries and Fishermen Welfare,
No.77, S.N.Chetty Street,
Royapuram,
Chennai-13.

Download Notification

கடைசி தேதி: 05.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments