மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு:- தருமபுரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூக பணியாளர் (Social Worker) பணியிடங்களை நிரப்புவதற்காக தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த பணியிடத்திற்கு தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பத்திரிக்கை செய்தி மற்றும் விண்ணப்பப்படிவத்தை dharmapuri.nic.in என்கிற மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 21.11.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Follow us on Google News
Follow us on Instagram
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தருமபுரி. |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | சமூக பணியாளர் (Social Worker) |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
சமூக பணியாளர் பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிக்கென காலியிடம் 01 என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக பணியாளர் பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதியானது சமூகப் பணி / சமூகவியல் / சமூக அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணியில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினியில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Graduate Preferably in B.A. in Social Work / Sociology | Social Scinces from experience candidate proficiency in Computer)
சமூக பணியாளர் பணிக்கான வயது வரம்பு:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக பணியாளர் பணிக்கான ஊதிய விவரம்:
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய்.18,536/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக பணியாளர் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
சமூக பணியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதிவை எனது நேர்காணல் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக பணியாளர் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தர்மபுரி மாவட்ட இணையதளமான dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
சமூக பணியாளர் பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
சமூக பாதுகாப்பு துறை,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி
கடைசி தேதி: 21.10.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments