தேசிய நலவாழ்வு குழுமம், மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு முழு தகவல்களுடன்!
தேசிய நலவாழ்வு குழுமம், மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு முழு தகவல்களுடன்! |
தேசிய நலவாழ்வு குழுமம், மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு: தேசிய நலவாழ்வு குழுமம் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேசிய நல வாழ்வு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள Dental Surgeon காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான அறிவிப்பாணையை tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த பணிக்கு ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05.11.2002 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | தேசிய நலவாழ்வு குழுமம், திருவண்ணாமலை |
வகை | TN Govt JObs |
பணியின் பெயர் | Dental Surgeon |
காலியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Dental Surgeon பணிக்கான காலியிடங்கள்:
இந்தப் பணிக்கான காலியிடங்கள் மொத்தம் 02 (இரண்டு) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Dental Surgeon பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் BDS (Qualified) Registered Under TNDC படித்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Dental Surgeon பணிக்கான வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Dental Surgeon பணிக்கான ஊதிய விவரம்:
இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய்.34,000/- தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Dental Surgeon பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிகளுக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Dental Surgeon பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Dental Surgeon பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Dental Surgeon பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கௌரவ செயலாளர்/துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
கடைசி தேதி: 05.11.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments