மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! |
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி நியமனம் மூலம் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கான அறிவிப்பு விளம்பரம் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நேரடியாக அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 04.11.2022 மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவாரூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்கள் 01 (ஒன்று) என குறிப்பிடப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கான வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்களின் வயதுவரம்பு 01.10.2022 அன்றைய தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 37 இருக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கான முன்னுரிமை விவரம்:
இந்த பணிக்கான இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர் ஆதரவற்ற விதவை (Destitute Widows) அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கான எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் நேரடியாக அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு 04.11.2022-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் கல்வி சான்று, மாற்றுச் சான்று மற்றும் ஜாதி சான்று, வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட்ட ஆதரவற்ற விதவை சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டும் மையம்,
திருவாரூர்.
Notification & Application format PDF
கடைசி தேதி: 04.11.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments