மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு முழு தகவல்களுடன்! பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பியுங்கள்.
மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு முழு தகவல்களுடன்! |
மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு. அரியலூர் மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரியலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிட்மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.11.2022.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, அரியலூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு பணிகள் |
காலியிடங்கள் | 81 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பணிக்கான காலியிடங்கள்:
அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள்:-
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பணிக்கான கல்வித்தகுதி:
ஆய்வக நுட்புநர்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பட்டயப்படிப்பு 2 ஆண்டுகள் King Institute of Preventive Medicine அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓட்டுநர்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹெவி லைசன்ஸ் (Heavy Licence) உடன் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வார்டு உதவியாளர், மருத்துவமனை பணியாளர், வண்டி தள்ளுநர், மற்றும் துப்புரவு பணியாளர்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம் உள்ள 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பணிக்கான வயது வரம்பு:
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பணிக்கான ஊதிய விவரம்:
இந்த பணிகளுக்கான ஊதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிகளுக்கான எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து முதல்வர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரியலூர் அவர்களிடம் ஆதார் அட்டை நகல் மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் (Attested only - சான்று பெற்றது) விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
அரியலூர்.
கடைசி தேதி: 11.11.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments