Ticker

6/recent/ticker-posts

Ad Code

திண்டுக்கல் மாவட்டத்தில் நிரந்தர அரசு வேலை

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு

Rural Development Recruitment

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 31.08.2020 வரை காலியாக உள்ள 5 ஈப்பு ஓட்டுநர்கள், 4 அலுவலக உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
ஈப்பு ஓட்டுநர்
காலியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை offline

திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை பணிக்கான காலியிடங்கள்:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் ஈப்பு ஓட்டுநர்கள் - 5, அலுவலக உதவியாளர்கள் - 4 என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அலுவலக உதவியாளர் - 04
  • ஈப்பு ஓட்டுநர்கள் - 05
  • திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை பணிக்கான கல்வித்தகுதி:

  • ஈப்பு ஓட்டநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மேலும் 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை பணிக்கான வயது வரம்பு:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது வரம்பு 01.07.2022-ன் படி பொதுப்பிரிவினர் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சமாக 32 வயது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 வயது முதல் 34 வயது வரை இருக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயது வரை இருக்கலாம். ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயதுவரம்பு 42 வரைக்கும் இருக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் அவர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 50 வயது, BC, MBC, SC, ST பிரிவினருக்கு அதிகபட்சமாக 55 வயது வரைக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

    திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை பணிக்கான ஊதிய விவரம்:

  • ஈப்பு ஓட்டுனர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய்.19,500-லிருந்து அதிகபட்சமாக 62,000 வரைக்கும் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • தேர்ந்தெடுக்கப்படும் அலுவலக உதவியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய்.15,500/- லிருந்து அதிகபட்சமாக ரூபாய்.50,000/- வரைக்கும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

  • இந்த இரண்டு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவிதமான விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    இந்த பணிகள் அனைத்தும் வயதுவரம்பு அடிப்படையிலும் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது

    திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில் (dindigul.nic.in) கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் கல்வி சான்று நகல் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூபாய்.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உரை ஒன்று இணைத்து அனுப்ப வேண்டும்.

    திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
    154, வளர்ச்சிப்பிரிவு,
    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
    திண்டுக்கல் - 624 004.

    Download Notfication PDF

    கடைசி தேதி: 12.10.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments