Ticker

6/recent/ticker-posts

Ad Code

Tiruppur District Collector Office Recruitment

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வேலைவாய்ப்பு 2022: | அலுவலக உதவியாளர் | காலியிடங்களின் எண்ணிக்கை 24 | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.05.2022. | Application can be downloaded @ tiruppur.nic.in.

திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு  அறிவிப்பாணை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 24. இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் நியமன முறையில் நிரப்பப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.05.2022.

Tiruppur District Collector Office  Recruitment

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் திருப்பூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://tiruppur.nic.in) கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து பார்த்து பிறகு விண்ணப்பிக்கவும்.

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்பதாரர்கள் திருப்பூர் மாவட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர் இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராகவும் , ஓட்டுனர் உரிமம் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் அறிவிப்பு ஆணையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ விலாசத்திற்கு மட்டுமே அனுப்ப வேண்டும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலகம்
பதவியின் பெயர் அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி 8- ம் வகுப்பு தேர்ச்சி
காலியிடங்களின் எண்ணிக்கை 24
வேலை இடம் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலகம்
Last Date to Apply 15.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tiruppur.nic.in

இந்த பணிக்கான காலியிட விவரங்கள்

பதவியின் பெயர் காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் 24

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சம்பள விவரங்கள்

  • குறிப்பிடப்படவில்லை

  • வயது வரம்பு விவரங்கள்

  • பொதுப் பிரிவினருக்கு 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 34- க்குள் இருக்க வேண்டும்
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் குறைந்தபட்ச வயது 18-ம் அதிகபட்ச வயது 37-ம் இருக்க வேண்டும்
  • ஆதரவற்ற விதவை (அனைத்து பிரிவினருக்கும்) குறைந்தபட்ச வயது 18-ம் அதிகபட்ச வயது 37-ம் இருக்க வேண்டும்

  • முன்பதிவு விவரங்கள்

  • அறிவிப்பாணையை பார்க்கவும்

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • இல்லை

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • திருப்பூரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

  • முக்கியமான தகவல்

    Start Date 13.04.2022
    End Date 15.05.2022
    Official Website https://tiruppur.nic.in
    Official Notification
    Application Format
    Download Here

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments